சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் மக்கள் அச்சம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் மக்கள் அச்சம்
X
அவற்றை பிடித்து அப்புறப்படுத்த கோரிக்கை
சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் பல்வேறு சான்றிதழ்கள் வாங்க ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். மேலும் அங்கு பணியாற்றும் அரசு ஊழியர்களும் வந்து செல்வார்கள். இதனால் காலை முதல் இரவு வரை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தினமும் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. குறிப்பாக 3-வது மாடியில் பத்திரபதிவு அலுவலகம் உள்ள இடத்தில் அவ்வப்போது குரங்குகள் முகாமிட்டு கொண்டு உள்ளன. இதனால் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இது குறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கூறியதாவது:- பல்வேறு அலுவலங்களில் தேவையான சான்றிதழ்கள் வாங்க கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றோம். பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். இந்த நிலையில் அங்கு குரங்குகள் அவ்வப்போது முகாமிட்டுக்கொண்டு பத்திரப்பதிவு செய்ய வருபவர்களை கடிக்க பாய்கிறது. இதனால் பயந்து ஓட வேண்டி உள்ளது. எனவே வனத்துறை மூலம் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டு, மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story