தா.பழூரில் மாவட்ட கலெக்டர்

தா.பழூரில் மாவட்ட கலெக்டர்
X
தா.பழூரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் திடிர் ஆய்வு
அரியலூர், ஏப்.16- அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு  செய்தனர் இதில் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் தேசிய தோட்டக்கலைத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி கார்டனை ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர் அப்போது நர்சரி கார்டனில் இருந்த பழம் மற்றும் பல்வேறு மரக்கன்றுகள் விவரங்கள் அதன் எண்ணிக்கை குறித்து தோட்டக்கலைத் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார் அப்போது விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பழம் மற்றும் மரக்கன்றுகளை தாமதம் இல்லாமல் வழங்கவும் நர்சரி கார்டனை தரமான முறையில் பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார் இதனையடுத்து தா.பழூர் வேளாண் உதவி மையத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது வேளாண் உதவி மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட விதைகள் மற்றும் உரங்களின் இருப்பு விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார் மேலும் விவசாயிகளுக்கு தாமதம் இன்றி உரங்களை  வழங்கவும் விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப உரங்கள் மற்றும் விதைகளை இருப்பு வைக்கவும்  அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் இதனையடுத்து தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வகையான நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் விவரம் குறித்து கேட்டறிந்த ஆட்சியர் இருப்பில் உள்ள மருந்து மாத்திரைகள் குறித்து ஆய்வு செய்தார் தரமான மருந்து மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்கவும் நோயாளிகளுக்கு கரிசனமான முறையில் சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார் ஆய்வில் அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story