கோடை விடுமுறையை முன்னிட்டு பெங்களூரு-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள்

X
கோடை விடுமுறையை முன்னிட்டு ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பெங்களூருவில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக நாளை முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரெயில் (06577) நாளை (வியாழக்கிழமை) எஸ்.எம்.வி.டி. பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக இரவு 8.20 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, போத்தனூர், பாலக்காடு வழியாக மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறு மார்க்கத்தில் கொல்லம்-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு ரெயில் (06578) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொல்லத்தில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக இரவு 9.20 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக இரவு 1.30 மணிக்கு எஸ்எம்விடி பெங்களூரு சென்றடையும். இதேபோல் எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரெயில் (06585) வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) எஸ்.எம்.வி.டி. பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக 8.20 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறு மார்க்கத்தில் கொல்லம்-எஸ்எம்விடி பெங்களூரு சிறப்பு ரெயில் (06586) வருகிற 20-ந் தேதி கொல்லத்தில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 4.10 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 4.20 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக காலை 8.35 மணிக்கு எஸ்எம்விடி பெங்களூரு சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
Next Story

