பல்லாங்குழியான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

X

பண்ருட்டிகண்டிகை சந்திப்பில் பல்லாங்குழியான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அடுத்த, பண்ருட்டிகண்டிகை சந்திப்பில் பிரிந்து, பனையூர், எழிச்சூர் வழியாக பாலுார் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியே, எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணியர், நோயாளிகள் நாள்தோறும் சிக்கிச்சை மற்றும் பரிசோதனைக்காக சென்று வருகின்றனர். அதேபோல, பனையூர், எழுச்சூர் பகுதிமக்கள், பள்ளி - கல்லுாரி மாணவ - மாணவியர் உட்பட ஏராளமானோர், ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம், தாம்பரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலையில், பண்ருட்டி கண்டிகை சந்திப்பில், சாலை ஆங்காங்கே சேதமடைந்து பள்ளங்களாக மாறியுள்ளது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் கர்ப்பிணியர், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமா பள்ளத்தில் இடறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, பண்ருட்டிகண்டிகை சந்திப்பில் பல்லாங்குழியான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story