விவசாய பூமியில் அறநிலை துறை அதிகாரிகள் அத்துமீறி அராஜகம் அதிகரிகளை சிறை பிடித்து போராட்டம்

X
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், முள்ளிபுரம் கிராமத்தில் சட்ட விரோதமாக, எவ்வித உத்தரவும் இல்லாமல், அத்துமீறி விவசாய நிலத்தில் உள்ளே நுழைந்து இந்து சமய அறநிலையத்துறை விவசாயின் வீட்டை இடித்து அத்துமீறி அராஜகம். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டம்.பரபரப்பு சிவன்மலை இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று காங்கேயம் முள்ளிபுரத்தில் வெங்கடாசலத்துக்கு சொந்தமான 85 சென்ட் வீட்டுடன் கூடிய விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்து, இந்து சமய அறநிலையத்துறையினர் நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது உரிமையியல் நீதிமன்ற உத்தரவு என எவ்வித உத்தரவும் இல்லாமல் அதிரடியாக வீட்டை இடித்து விவசாய பயிர்களை அழித்து நாசம் செய்து உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உச்ச நீதிமன்றம் பலமுறை ஆக்கிரமிப்பு தாரராக இருந்தாலும் சட்டப்படி அழைப்பானை கொடுத்து, விசாரித்து, உத்தரவு பிறப்பித்து அதன் பின்பே, ஆக்கிரமிப்பை அகற்ற முடியும் என தெரிவித்த பின்பும் இது போன்ற அராஜக செயலில் ஈடுபட்டுள்ளனர். இதே முள்ளிபுரம் கிராமம், இதே புல எண் - 385 / 2ல் மொத்தம் 4.84 சென்ட் விவசாய நிலம் உள்ளது, இதில் அர்ஜுன்ராஜ் என்பவருக்கு எதிராக உத்தரவு பெற்றுள்ளனர், அவரது வீட்டை இடிக்க வந்தபோது அவர் மேல்முறையீடு செய்வதற்கு அவகாசம் கேட்டு பெற்றுள்ளார். அதே சர்வே நம்பர் 385 / 2 ல் 85 சென்ட்டில் வீடு கட்டி விவசாயம் செய்து வந்த வெங்கடாச்சலம் என்பவரது வீட்டிற்கு எவ்வித உத்தரவு இல்லாமல் இன்று இடித்துள்ளனர். மேற்படி நிலம் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமானது அல்ல, அது இனாம் நிலமாகும், இனாம் நிலங்கள் உழுதவர்களுக்கே சொந்தம் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் இனாமொழிப்புச் சட்டங்களின் மூலம் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மூன்று கோடி ஏக்கருக்கும் மேற்பட்ட இனாம் நிலங்கள் சட்டங்கள் இயற்றப்பட்டு பட்டாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு கூட சமீபத்தில் கர்நாடக அரசும், குஜராத் அரசும் சட்ட திருத்தம் செய்து பட்டா கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இனாம் நிலப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்கள். பிரச்சனை இவ்வாறு இருக்கும்போது, இனாம் நிலத்தில் அத்துமீறி நுழைந்து இன்று இந்து சமய அறநிலையத்துறை நடந்து கொண்டது சட்டத்திற்கு முரணானதாகும். அவர்களுடைய இந்த சட்டவிரோத செயலுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் 50 க்கும் மேற்பட்டோர் மீது, காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து, கைது செய்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை வட்டாச்சியர் அலுவலகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக கையக படுத்த வந்த விவசாயிக்கு ஆதரவாக விவசாயிகள்,பொதுமக்கள்,விவசாய சங்க நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு அறநிலையத்துறை அதிகாரிகளையும் அவர்கள் வந்த வாகனங்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.பின்னர் காங்கேயம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் பின்னர் சுமுகமாக கலைந்து சென்றனர்.
Next Story

