விஷம் தின்று கோழி கடை ஊழியர் பலி

X

தக்கலை
குமரி மாவட்டம் மாங்குழி பகுதியை சேர்ந்தவர் ரவிராஜ் (50). இவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு கோழி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. அது முதல் உடல்நிலை சரியில்லாத ரவிராஜ் மன வருத்தத்தில் இருந்து வந்தார். ஆனாலும் கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கோழி கடைக்கு சென்ற ரவிராஜ் அங்கு இருந்த விஷப்படியை எடுத்து தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் ரவி ராஜ் வாயிலிருந்து நுரை தள்ளியது. இதனை கண்ட அதிர்ச்சியடைந்த கோழிக்கடை உரிமையாளர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அழகியமண்டபம் பகுதியில் உள்ளது தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரவிராஜ் சிகிச்சை பலன்டி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த ரவிராஜன் மனைவி வளர்மதி அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story