சூளகிரி அருகே டூவீலர்கள் மோதல் வாலிபர் உயிரிழப்பு

X
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஆரூர்பதி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை (25) இவரும் ஓமலூரை சேர்ந்த சரத் (24) என்பவரும் டூவீலரில் ஒசூர் நோக்கி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சர்வீஸ் சாலை அருகே சென்ற போது அந்த வழியாக டூவீலரில் வந்த நபர் சரத் மற்றும் செல்ல துரை சென்ற டூவீலர் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த செல்லதுரை சூளகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story

