புதுப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வாரச்சந்தை நிர்வாக காரணத்தினால் தள்ளி வைப்பதாக கூறியதால் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம்..

புதுப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும்  வாரச்சந்தை நிர்வாக காரணத்தினால் தள்ளி வைப்பதாக கூறியதால் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம்..
X
புதுப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வாரச்சந்தை நிர்வாக காரணத்தினால் தள்ளி வைப்பதாக கூறியதால் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு 2025 -2026 ஆண்டிற்கான வார சந்தைக்கான ஏளமானது கடந்த மார்ச் மாதமே நடைபெற வேண்டிய நிலையில் நிர்வாக காரணமாக கடந்த 3 முறையாக தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று புதன்கிழமை மீண்டும் ஊராட்சி மன்ற கூடத்தில் ஏலத்திற்கான கூட்டமானது வெண்ணந்தூர் வட்டார அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுகவினர் திமுகவினர் என பலரும் கலந்து கொண்ட நிலையில் ஆளும் கட்சியில் ஆதரவால் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவித்து நிலையில் அப்போது அதிமுகவினர் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக அதிமுகவினர் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டதை அடுத்து ஊராட்சி மன்ற கூடத்தில் ஏலத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏலம் 3 லட்சத்து 36 ஆயிரத்தில் இருந்து தொடங்கி இரு தரப்பினரும் ஏலத்தை கேட்ட நிலையில் இறுதியாக 5,41,000 க்கு ஏலம் விடப்பட்டது. நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு ஏலம் விடப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது...
Next Story