லஞ்சம் : பேரூராட்சி எழுத்தர் மின் பணியாளர் கைது

லஞ்சம் : பேரூராட்சி எழுத்தர் மின் பணியாளர் கைது
X
பாகோடு
கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சியில் கமலன் என்பவர் மகன் தேவதாஸ் என்பவர் வெளிநாட்டில் வசிக்கும் தனது சகோதரரின் 18 சென்ட் இடம் மற்றும் அதில் உள்ள வீட்டை பராமரித்து வருகிறார். அந்த வீட்டின் உரிமையாளர் பெயர் மாற்றம் செய்ய பாகோடு பேரூராட்சி அலுவலகத்தை அணுகிய போது உரிமையாளர் பெயரை மாற்றம் செய்ய பேரூராட்சி அலுவலக பதிவறை எழுத்தர் ஜஸ்டின் ஜெபராஜ் ரூ. 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால் மட்டுமே பெயர் மாற்றத்திற்கான பணிகளை தொடங்க இயலும் என்று கூறியுள்ளார். தேவதாஸ் குமரி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் படி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர் . பின்னர் இன்று 16-04-2025 தேவதாசிடம் பதிவறை எழுத்தர் ஜஸ்டின் ஜெபராஜ் கேட்ட 20 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை ரசாயன பவுடர் தடவி கொடுத்து அனுப்பினர். மாலை 4 மணி அளவில் கொடுத்த போது ஜஸ்டின் ஜபராஜ் மின் பணியாளர் சுஜின் என்பவரிடம் வாங்க கூறினார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி சால்வன் துரை மற்றும் போலீசார் பாய்ந்து சென்று கையும் களவுமாக இருவரையும் பிடித்தனர் . தொடர்ந்து சோதனையும் விசாரணை நடைபெற்று வருகிறது. இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.
Next Story