ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X
ஈரோட்டில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகம் முன்பு தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு மற்றும் ஈரோடு மாவட்ட பீனிக்ஸ் மாற்றுத் திறனாளிகள் நிலச் சங்கங்களை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டியும்,பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிகின்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி வேண்டும் ,அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று இன்னமும் வேலை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் ஒவ்வொரு மாவட்டத்தில் பணிபுரிய மாற்றத்திறனாளி அலுவலகம் ஊழியர்களை கண்டித்தும் அவர்களை மாற்ற வலியுறுத்தி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..அப்போது மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் அப்படி நிறைவேறாத பட்சத்தில் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து அடுத்து 20 நாட்களில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
Next Story