சங்கரன்கோவிலில் குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கினார்

X

குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் 18-வது வார்டு பகுதி புதுமனை தெருவில், திமுக நகரச் செயலாளர் பிரகாஷ் மற்றும் வார்டு உறுப்பினர் சரவணன் இணைந்து புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு அப்பகுதி உள்ள வார்டில் பள்ளி குழந்தைகளுக்கு 135 பேருக்கு பாடப் புத்தகம், எழுதுகோல் மற்றும் டிபன் பாக்ஸ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story