தகாத உறவை கண்டித்து மூவர் கொலை

X

தகாத உறவை கண்டித்து மூவர் கொலை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மகளின் திருமணத்தை மீறிய உறவை கண்டித்த தந்தையை மனைவி, மகள், மச்சினன் 3 பேர் சேர்ந்த அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடாகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....தந்தையை கொலை செய்த தாய் மகள், தாய்மாமா கைது... விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எம்.பி.கே. புதுப்பட்டி பகுதியை சேர்ந்த பால் வியாபாரி சுப்பிரமணி. (வயது 55) இவருக்கு ஈஸ்வரி (வயது 45) என்ற மனைவியும் ராஜலட்சுமி, தெய்வானை என்ற இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகன் ராஜலட்சுமி சக்திவேல் என்பவருடன் திருமணமாகி ராஜபாளையம் அருகே ஒத்தப்பட்டி பகுதியில் கனவனுடன் வசித்து வரும் வருகிறார். இளைய மகள் தெய்வானைக்கு (வயது 26) கார்த்திக் என்பவருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தெய்வானைக்கும் கார்த்திக்கும் இடையே அவ்வப்போது சண்டை சச்சரவு எழுந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரையும் சமாதானம் செய்து தெய்வானையின் தந்தை வசித்து வந்த எம்.பி. கே புதுப்பட்டி கிராமத்தில் தனியே வீடு பார்த்து குடியமர்த்தியுள்ளனர். இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் தெய்வானை மற்றும் அவரது கணவர் கார்த்திக்கிற்க்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு தாய் ஈஸ்வரி மற்றும் இளைய மகள் தெய்வானை ஆகியோர் கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் தெய்வானையின் கணவன் கார்த்திக் ஊரை விட்டு சென்றவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இளையமகள் தெய்வானை மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவனுடன் சண்டையிட்டு அவரை தாக்கியது தவறு என மகள் தெய்வானை மற்றும் மனைவி ஈஸ்வரியை தந்தை சுப்பிரமணி கண்டித்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த தாய் மகள் இருவரும் நேற்று சுப்பிரமணியிடம் கடுமையான வாக்குவாதம் செய்து சண்டையிட்டுள்ளனர். இதனால் வீட்டிலிருந்து பயங்கர கூச்சல் சப்தம் வெளியேறிய நிலையில் பின்னர் சத்தம் எதுவுமின்றி வீடு அமைதியாக இருந்துள்ளது. திடீரென சுப்பிரமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மனைவி ஈஸ்வரியும் மகள் தெய்வானையும் கதறி அழுதுள்ளனர். அக்கம் பக்கத்தினர் இவர்களின் கதறலை கேட்டு உள்ளே சென்று பார்த்தபோது எழுந்து நின்றால் தலை தட்டும் ஆஸ்பெட்டாஸ் அறையில் சுப்பிரமணி தூக்கிட்டு நிலையில் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் சுப்பிரமணியின் உடலில் பலத்த ரத்த காயங்கள் இருப்பதையும் அரை முழுவதும் ரத்தம் சிந்திய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு சந்தேகமடைந்தனர். பின்னர் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுப்பிரமணியன் மனைவி ஈஸ்வரி மற்றும் மகள் தெய்வானை மீது சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் மகள் தெய்வானை வெளி நபருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததை கார்த்திக் கண்டித்ததால் அவரை அடுத்து விரட்டியதாகவும், தந்தை சுப்ரமணியும் மகளின் தகாத உறவை கண்டித்ததினால் தாய் ஈஸ்வரி மகள் தெய்வானை மற்றும் ஈஸ்வரியின் தம்பியான தெய்வானையின் தாய்மாமன் செல்வகுமார் ஆகிய மூவரும் சேர்ந்து சுப்ரமணியை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்தனர். மகளின் வாழ்க்கை கண்ணெதிரே நாசமாகுவதை தடுக்க அறிவுரை கூறிய தந்தையினை தாய் மகள் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story