வெறி நாய்கள் வளர்ப்பு பூனை ஒன்றை கடித்து குதறி கொன்ற காட்சி பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது.,நகராட்சி நிர்வாகம் அலட்சியப் போக்கில் செயல் படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு.

X

*விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சுற்றித் திரியும் வெறி நாய்கள் வளர்ப்பு பூனை ஒன்றை கடித்து குதறி கொன்ற காட்சி பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது.,நகராட்சி நிர்வாகம் அலட்சியப் போக்கில் செயல் படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு...*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சுற்றித் திரியும் வெறி நாய்கள் வளர்ப்பு பூனை ஒன்றை கடித்து குதறி கொன்ற காட்சி பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது.,நகராட்சி நிர்வாகம் அலட்சியப் போக்கில் செயல் படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தெருக்களில் வெறி நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. தினந்தோறும் வெறி நாய்கள் கடித்து ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி சிகிச்சை பெற்று வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆத்துக்கடை தெரு பகுதியில் வெறி நாய்கள் அதிகளவு சுற்றித்திரிந்து பொதுமக்களை பயமுறித்தி வருகிறது. மேலும் வெறி நாய்களுக்கு உணவு கிடைக்காமல் பொதுமக்கள் வாங்கி வரும் பொருட்களை பார்த்து குறைத்து கவ்விக் கொண்டு செல்கிறது. இந்நிலையில் வீட்டில் வளர்ப்பு பூனை ஒன்று தெரு பகுதியில் வந்த போது சுமார் ஐந்து க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் பூனையை கவ்வி குதறி கடித்து உயிரைப் பறித்து தின்றது இந்த காட்சியை கண்ட பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் சுற்றி திரியும் வெறி நாய்களை கட்டுப்படுத்தவும் ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்கு புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ஒரு சில பகுதிகளில் கண் துடைப்பிற்கு மட்டுமே வெறி நாய்களுக்கு ரேபீஸ் ஊசி போடப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். வளர்ப்பு பூனை ஒன்றை கடித்து குதறி கொன்ற வெறிநாய்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை கடித்தால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும் என்று குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர். ஸ்டாலின் அரசின் மாவட்ட நிர்வாகம் தெருவில் சுற்றித் திரியும் வெறி நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திற்கு ஆணை இடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story