உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பள்ளி மாணவர்களுடன் மாணவர்களாக மாறி தலையில் அமர்ந்து மதிய உணவு அருந்தி மகிழ்ந்து பேசினார்*

உங்களை தேடி உங்கள் ஊரில்  திட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பள்ளி மாணவர்களுடன் மாணவர்களாக மாறி தலையில் அமர்ந்து மதிய உணவு அருந்தி மகிழ்ந்து பேசினார்*
X
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பள்ளி மாணவர்களுடன் மாணவர்களாக மாறி தலையில் அமர்ந்து மதிய உணவு அருந்தி மகிழ்ந்து பேசினார்*
அருப்புக்கோட்டையில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பள்ளி மாணவர்களுடன் மாணவர்களாக மாறி தலையில் அமர்ந்து மதிய உணவு அருந்தி மகிழ்ந்து பேசினார் அரசு தொடக்கப்பள்ளியில் சுத்தம் செய்யப்படாமல் இருந்த பூங்கா மற்றும் விளையாட்டு உபகரணங்களை நீங்கள் சுத்தம் செய்ததா இவ்வளவு அழகாக இருக்கிறது என கேட்டதுடன் மதிய உணவு குலைவாக இருந்ததால் அதை சரி செய்யுமாறும் அடுத்த முறை விசிட் அடிக்கும் போது நன்றாக இருக்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியரை எச்சரித்து அறிவுறுத்தினார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டத்தில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அருப்புக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுக்கிலநத்தம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திடீர் விசிட் அடித்தார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் புதர் மண்டி சேதமடைந்ததை கண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஏன் இவ்வாறு கிடக்கிறது இதை 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டியது தானே என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட ஆட்சியர் வரவேற்றபோது ஏன் இந்த விளையாட்டு உபகரணங்கள் இவ்வாறு உள்ளது என கேட்டதற்கு தலைமை ஆசிரியர் தினம்தோறும் சுத்தம் செய்து கொண்டு தான் இருக்கிறோம் என கூறினார். தினம்தோறும் சுத்தம் செய்வதால் இவ்வளவு அழகாக இருக்கிறதா பரவாயில்லையே என எனக் கூடிய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முறையாக சுத்தம் செய்து வைக்குமாறு தலைமை ஆசிரியரை அறிவுறுத்தினார்.‌ அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் இணைந்து தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மதிய உணவு அருந்தினர். அப்போது மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கப்பட்ட தக்காளி சாதம் குலைவாக இருந்ததால் ஏன் சாப்பாடு இவ்வளவு குறைவாக இருக்கிறது என சத்துணவு பணியாளரிடம் கேள்வி எழுப்பினார்.‌ தினந்தோறும் குக்கரில் தான் சமையல் செய்கிறோம் என சத்துணவு அமைப்பாளர் பதில் அளித்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பள்ளி மாணவராகவே மாறி அவர்களுடன் சிரித்து பேசி மதிய உணவு அருந்தினார் மேலும் சமையல் எப்படி இருக்கிறது எந்த சமையல் உங்களுக்கு பிடிக்கும் உங்கள் வீட்டில் யார்யார் இருக்கிறார்கள் என மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் தலைமை ஆசிரியரிடம், தினமும் குக்கரில் தான் சமைக்கிறார்கள் என கூறுகிறார்கள் இருந்தாலும் சாப்பாடு மிக குலைவாக உள்ளது. அடுத்த நான் இங்கு திடீர் விசிட் அடிக்கும் போது இதை சரி செய்திருக்க வேண்டும் என தலைமை ஆசிரியரை கடிந்து கொண்டார். அதனை தொடர்ந்து டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு செய்து என் அங்கன்வாடி மையத்தைச் சுற்றி பூங்கா அமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர்களிடம் வீடு தூரம் குப்பைகளை சேகரிக்கிறீர்களா குப்பைகளை பொதுமக்கள் தனித்தனியாக பிரித்து வழங்குகிறார்களா என கேள்வி எழுப்பினார்.‌ அதனைத் தொடர்ந்து வேலாயுதபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story