ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா: மண்டலஇணை இயக்குன் பா.சிந்தியா செல்வி பங்கேற்பு

X
Rasipuram King 24x7 |16 April 2025 8:50 PM ISTராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா: மண்டலஇணை இயக்குன் பா.சிந்தியா செல்வி பங்கேற்பு
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் சி.பானுமதி தலைமை ஏற்று விழாவினை துவக்கி வைத்துப் பேசினார். தர்மபுரி மண்டல கல்லூரி க்கல்வி இணை இயக்குனர் பா ச.ந்தியா செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களின் வழங்கிப் பேசினார். விழாவில் முனைவர் பா.சிந்தியா செல்வி பேசுகையில், கல்வி மட்டுமே மாணவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்பதால், மாணவர்கள் இளங்கலை கல்வியோடு நின்றுவிடாமல் முதுகலை உயர் கல்வியையும் தொடர்ந்து பயின்று வாழ்க்கையில் உயர்ந்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என அறிவுறித்தினார். மேலும் கிராமப்புற கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று இதே போல் பட்டம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக விழாவில் துவக்க உரையாற்றிப் பேசிய கல்லூரி முதல்வர் சி.பானுமதி , இக்கல்லூரியில் 3362 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இளநிலையிலும் முதுநிலையிலும் பயின்று 685 மாணவ மாணவியர் தற்போது பட்டம் பெறுகின்றனர் . ண்பட்ட முறையில் கற்று அதன் மூலம் இன்று பட்டம் பெறுகின்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்த அவர், அவ்வையார், மகாத்மா காந்தி ,பாரதியார் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். பட்டங்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் பின்னர் உறுதிமொழி ஏற்றனர். விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.
Next Story
