சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

X

சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை திருவிடந்தையில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அடுத்த மாதம் 11-ந்தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு-2025 நடைபெற உள்ளது. இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 52 ஏக்கர் பரப்பளவு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை திருவிடந்தையில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்பு வழிபாட்டுடன் பந்தல்கால் நட்டு தொடங்கி வைத்தார். இதில் கட்சியின் பொது செயலாளர் வடிவேல் ராமன், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா, முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்த கேள்விகளுக்கு எல்லாம் இன்னொரு நாள் பதில் சொல்றேன் என்று கூறி நழுவிச் சென்றார்.
Next Story