தூத்துக்குடியில் சிறுபடகு மீனவர்கள் ஸ்ட்ரைக்!

தூத்துக்குடியில் சிறுபடகு மீனவர்கள் ஸ்ட்ரைக்!
X
தூத்துக்குடியில் சிறுபடகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் ‘ப’ வடிவ ஜெட்டி பாலம் அமைக்க வலியுறுத்தி சிறுபடகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  தூத்துக்குடி திரேஸ்புரத்தில் உள்ள நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தின் ஒரு பகுதியில் சுமார் 200 சிறு படகு மீனவர்கள் சாளை மீன், நண்டு ஆகியவற்றை பிடித்து தொழில் செய்து வருகின்றனர். தற்போது அங்கு போட் யார்டு அமைக்கப்பட்டுள்ளதால், பெரிய படகுகளை கடலில் இறக்கும்போது இவர்களது படகுகள் சேதமடைவதாகக் கூறி தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சிறு படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திரேஸ்புரம் புனித தோமையார் சாளை மீன்பிடி மீனவர்கள் நலச்சங்க தலைவர் மெல்டன் தலைமை வகித்தார். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கூறியதாவது: இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை கடலுக்குச் செல்வதில்லை என முடிவு செய்துள்ளோம். எனவே, எங்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மீன்வளத் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துப் படகுகளும் நிறுத்துவதற்கு ஏதுவாக ‘ப’ வடிவ ஜெட்டி பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Next Story