மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு சிலை, கொள்ளிடத்தில் தடுப்பணை, பொன்னேரியை புனரமைக்கவும், சட்டப்பேரவையில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கோரிக்கை.

மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு சிலை, கொள்ளிடத்தில் தடுப்பணை, பொன்னேரியை புனரமைக்கவும், சட்டப்பேரவையில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கோரிக்கை.
X
மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு சிலையும் கொள்ளிடத்தில் தடுப்பனையும் பொன்னேரியை புனரமைக்கவும் சட்டப்பேரவையில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க .சொ.க. கண்ணன் கோரிக்கை வைத்தார்.
அரியலூர், ஏப்.16- மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்க வேண்டும் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் சோழ கங்கம் எனும் பொன்னேரியை பணரவைக்க வேண்டும் என ஜெயங்கொண்டம் எம் எல்.ஏ .க.சொ.க. கண்ணன சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்து பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில் தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை தொடர்பா விவாதம் நடந்துகொண்டிருந்தபோது ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன், தம்முடைய சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகளை முன் வைத்து பேசும்போது டெல்டா பகுதியாக விளங்கக்கூடிய அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடத்தில் 3 இடங்களில் தடுப்பணையை கட்ட வேண்டும், கங்கைகோட்டை சோழபுரம் அருங்காட்சியகத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்க வேண்டும், மேலும் மாமன்னன் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட சோழகங்கம் எனும் பொன்னேரியை புனரமைத்து தர வேண்டும், ஆண்டிமடம், தா.பழூருக்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், ஆண்டிமடத்திற்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க வேண்டும், ஆண்டிமடத்திலிருந்து தா.பழூர் வழியாக மதனதூர் வரை நான்கு வழி சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்து பேசி வரும் எம்எல்ஏ க.சொ.க.கண்ணனை தொகுதி மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story