பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டப்பணிகள் ஆய்வு.

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டப்பணிகள் ஆய்வு.
X
திருவாரூர் மாவட்டம்,நன்னிலம் ஒன்றியம், சொறக்குடி ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுவரும் இரண்டு வீடுகளின் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சொரக்குடி ஊராட்சியில், பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் இரண்டு வீடுகளின் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வீட்டின் கட்டுமான பணிகள் குறித்து உரிமையாளரிடம் கேட்டறிந்தார். இவ்ஆய்வில், நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story