கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகள் ஆய்வு.

கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகள் ஆய்வு.
X
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம், நரிகுடி கிராமத்தில், 2025-2026ஆம் ஆண்டிற்கான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகள் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியராய்வு.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நரிகுடி கிராமத்தில், 2025-2026ஆம் ஆண்டிற்கான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும், பேரிடர்-மேலாண்மை துறையின் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு வெட்டும் பணி நடைபெற்றுவருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். மேலும் கட்டுமான பணிகள் தொடர்பாக பயனாளர்களிடம் கேட்டறிந்தார். இவ்ஆய்வில், நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story