கருக்கலைப்பு மாத்திரைகள் விற்ற மருந்து கடைக்கு ‘சீல்’

கருக்கலைப்பு மாத்திரைகள் விற்ற மருந்து கடைக்கு ‘சீல்’
X
திருச்சியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்த மருந்து கடைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் ஒரு பெண் சிகிச் சைக்கு வந்துள்ளார். அந்த பெண்ணின் உடல் நிலை மோசமாக இருந்ததால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதே பிரச்சினைக்காக மேலும் சில பெண்களும் வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திருச்சி மாநகராட்சி தலைமை சுகாதார அதிகாரி டாக் டர் விஜய் சந்திரன் இதற்கு காரணம் என்ன என்பது குறித்து விசா ரணை நடத்தினார். இதில் திருச்சி கே.கே.நகர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு மருந்து கடையில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்கள் கருக் கலைப்புக்காக மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி தாய் சேய் நல அதிகாரி, பொதுமக் களில் ஒருவர் போல் குறிப்பிட்ட அந்த மருந்து கடைக்கு நேற்று முன் தினம் சென்று தனக்கு ஏற்கனவே பெரிய குழந்தைகள் இருப்பதால் தற்போது உருவாகி உள்ள கருவை கலைக்க விரும்புவதாகவும், அதற்கு கருக்கலைப்பு மாத்திரை வேண்டும் என்றும் கேட்டு உள்ளார். அதற்கு அந்த கடையில் 16-ந்தேதி காலை வந்து வாங்கி கொள்ளுங் கள் என கூறி உள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று தாய் சேய் நல அதிகாரி மீண்டும் அங்கு போய் கேட்ட போது ஜி.பே. மூலம் ரூ.2,200 பெற்றுக்கொண்டு ஒரு செட் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கி உள்ளனர். இதன் மூலம் அந்த கடையில் டாக்டர்கள் குறிப்புரை எதுவும் இன்றி சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்வது உறுதிபடுத்தப்பட்டது. இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி மாவட்ட மருந்துகள் கட்டுப்பாடு துணை இயக்குனரிடம் மாநகராட்சி சுகாதார அதிகாரி விஜய் சந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அந்த மருந்து கடையில் அதிரடியாக சோதனை நடத்தி னார்கள். பின்னர் அந்த மருந்து கடைக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Next Story