திருச்சி: போலி பாஸ்போர்ட் வழக்கில் ஒருவர் கைது

திருச்சி: போலி பாஸ்போர்ட் வழக்கில் ஒருவர் கைது
X
போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலா லம்பூர் நோக்கி ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக நின்றது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது 55) என்பவர் போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை பிடித்து விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story