காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி மீது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்கை பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள அமலாக்க துறையை கண்டித்து தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் வடிவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், ஜெய்சங்கர், மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் வேடியப்பன் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் ஞானசேகர், வேலன், மணி, வெங்கடாசலம், காமராஜ், வஜ்ஜிரம், பெரியசாமி, நகரத் தலைவர்கள் கணேசன், குமரவேல், தங்கராஜ், சிறுபான்மை அணி தலைவர் முபாரக் , ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் சென்னகேசவன், தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் வைரவன், ரங்கசாமி, ராஜா மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story





