எஸ்பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் ஏப்ரல் 16 நேற்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் எஸ் மகேஸ்வரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இந்த முகாமில் தர்மபுரி மாவட்டத்தின் 33 காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்தும் 84 புகார் மனுக்கள் புறப்பட்டு அவை அனைத்திற்கும் நேற்று உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது மேலும் புதிதாக மூன்று மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது மேல்விசாரணைக்காக அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலும் நேற்று நடைபெற்ற முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீதரன்,பாலசுப்பிரமணியம் மற்றும் துணை போலீஸ் சூப்பரண்டுகள் ராமன்,கரிகால் பரிசங்கர், மனோகரன், மகாலட்சுமி காவல் ஆய்வாளர்கள் வேலுதேவன், பார்த்திபன், புஷ்பராணி, அன்பழகன் உட்பட காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story





