சூலூர்: கஞ்சா பறிமுதல் - ஒடிசா வாலிபர் கைது !

சூலூர்:  கஞ்சா பறிமுதல் - ஒடிசா வாலிபர் கைது !
X
தென்னம்பாளையம் - அன்னூர் சாலையில் வரபிள்ளையார் கோவில் அருகே போதைப்பொருள் விற்பனைக்காக காத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே தென்னம்பாளையம் - அன்னூர் சாலையில் வரபிள்ளையார் கோவில் அருகே போதைப்பொருள் விற்பனைக்காக காத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபர் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் ஒடிசா மாநிலம், நயாகர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்ம லோஜன் டக்குவார் (வயது 37) என காவல்துறையினர் விசாரணையில் கண்டறிந்துள்ளனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கிலோ 300 கிராம் கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சூலூர் காவல்துறையினர், கைது செய்யப்பட்ட பத்ம லோஜன் டக்குவாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
Next Story