தர்மபுரி எம்பி தலைமையில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

பென்னாகரத்தில் தர்மபுரி எம்பி தலைமையில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம்
தர்மபுரி திமுக கிழக்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பென்னாகரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மடம் க முருகேசன் ஏற்பாட்டில் ஓன்றிய அவைத் தலைவர் P.முருகன் தலைமையிலும்,பென்னாகரம் தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று பென்னாகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் விவசாய தொழிலாளர் அணி மாநில துணை தலைவர் PNP இன்பசேகரன் Ex MLA, கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த கூட்டத்தில் முன்னிலை பேரூர் கழக செயலாளர் M.வீரமணி, ஒன்றிய நிர்வாகிகள் பூக்கடை முனியப்பன் ,J சுரேஷ் ,வள்ளி முருகன் ,ஏ சீனிவாசன் ,M பாலமுருகன் ,ராமகிருஷ்ணன் ,V கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறிக்கும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Next Story