மெய்யூர் ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் ஆலயத்தில் படுகள நிகழ்ச்சி.
ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா முன்னிட்டு புதன்கிழமை படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த திருவிழா முன்னிட்டு மார்ச் 28 முதல் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது மேலும் ஏப்ரல் 6 முதல் மகாபாரத நாடகம் நடைபெற்று வருகிறது. தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி , குறவஞ்சி, கீசக சம்ஹாரம், கிருஷ்ணன் தூது, அபிமன்யு சண்டை, கர்ணமோட்சம் ஆகிய நாடகம் நடைபெற்றது. பின்னர் இறுதி நிகழ்ச்சியாக படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டார். தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியசெயலாளர்கள் மாமது, மோகன், சுந்தர், நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
Next Story



