பட்டணத்து மாரியம்மன் கோயில் திருவிழா தேரோட்டம்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே இண்டூர் பி.எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ பட்டணத்து மாரியம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி நடப்பாண்டிக்கான திருவிழா கடந்த சித்திரை 1-ம் தேதி அன்று காலை கொடியேற்று விழா துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு இரவு, அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பொங்கல் வைத்து அம்மனுக்கு வழிபடும் நிகழ்ச்சி மற்றும் அலகு குத்தி, தீச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேர் இழுத்தல் நிகழ்ச்சி பம்ப வாத்தியங்கள், வான வேடிக்கை முழங்க வெகுவிமர்சையாக நடந்தது. இதில் பி.எஸ்.அக்ரஹாரம், இண்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதனைத் தொடர்ந்து அம்மன் வீடு வந்து சேரும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராடுதலுடன் கோயில் விழா நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Next Story




