சூளகிரி: வரத்து அதிகரிப்புகொத்தமல்லி விலை கடும் வீழ்ச்சி

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஏக்கர்கணக்கில் கொத்தமல்லி விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் கொத்தமல்லியை வியாபாரிகள் நிலத்திற்கே வந்து கொள்முதல் செய்வர். பின்னர் கொத்தமல்லி பல்வேறு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு வேன்களில் ஏற்றி அனுப்பப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கட்டு ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரிப்பால் ஒரு கட்டு 1 ரூபாய்க்கு கூட வாங்குவதற்கு யாரும் முன்வருவது இல்லை. மாடுகள் மேயவிட்டும், டிரங்கடர் மூலம் தோட்டத்திலேயே அளித்து வருகின்றனர்.
Next Story

