அமலாக்கத்துறையை கண்டித்து

அமலாக்கத்துறையை கண்டித்து
X
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், அமலாக்கத்துறையை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜகணபதி முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி எம்.பி. ஆகியோர் மீது பண பரிவர்த்தனை மோசடி என்று கூறி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளதை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story