சேலத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

சேலத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் செவ்வாய்பேட்டை கபிலர் தெருவை சேர்ந்தவர் வசந்தா (வயது 75). இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பால் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் வசந்தா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் வசந்தாவிடம் நகையை பறித்து சென்றது ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டியை சேர்ந்த கார் டிரைவரான அஜித்குமார் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story