புதிய ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

புதிய ரயில் பாதையில் சோதனை ஓட்டம்
X
ஓட்டம்
சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வரையில் புதிய ரயில் பாதை திட்டம் கடந்த 2016ல் துவங்கியது. மத்திய, மாநில அரசு பங்களிப்பில் ரூ.116 கோடி மதிப்பில் சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வரையிலான 16 கி.மீ., தொலைவிற்கு பணிகள் துவங்கியது. இதில், சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரையில் 12 கி.மீ., தொலைவில் ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தென்னக ரயில்வே அதிகாரிகள், சென்னை ரயில்வே கட்டுமான பிரிவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ரயில்பாதை பாதுகாப்பு குறித்து முழுமையாக 10 டிராலிகளில் சென்று நேற்று காலை ஆய்வு செய்தனர். உடன் சின்னசேலத்திலிருந்து சோதனை ரயிலை 100 கி.மீ., வேகத்தில் ஓட்டி பொற்படாக்குறிச்சிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மீண்டும் சென்னை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி, தலைமை நிர்வாக அதிகாரி மவுரியா, தென்னக ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார்சின்ஹா, துணை தலைமை பொறியாளர் திருமால் ஆகியோர் கொண்ட பாதுகாப்பு, கட்டுமான, நிர்வாக பிரிவு அதிகாரிகள் குழுவினர் சின்னசேலம் வரை 121 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தினர்.
Next Story