கோவை: அமலாக்க துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

கோவை: அமலாக்க துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
X
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கோவையில் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மத்திய அரசின் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Next Story