வாணியம்பாடி அருகே கட்டிட மேஸ்திரி நீரில் மூழ்கிய உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே கட்டிட மேஸ்திரி நீரில் மூழ்கிய உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாலாறு தடுப்பணையில் குளிக்கச் சென்ற கட்டிட மேஸ்திரி மனைவி, பிள்ளைகள் கண்முன்னே நீரில் மூழ்கி மாயம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கட்டிடம் மேஸ்திரி சண்முகம் (வயது 45) இவருடைய பெரியப்பாவின் மகள் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் காரிய சடங்குகள் முடித்துவிட்டு இன்று மினி லாரி மூலம் சண்முகம் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் மினிலாரி மூலம் தமிழக ஆந்திர எல்லை பகுதிகளில் உள்ள கனகநாச்சியம்மன் கோவிலில் வழிபாடு செய்து சடங்குகள் முடித்துவிட்டு அங்குள்ள புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் வேண்டாம் என்று கூறியும் அங்குள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது மனைவி மற்றும் பிள்ளைகள் கண் முன்னே தடுப்பணை நீரில் மூழ்கி சண்முகம் மாயமானார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்ற உள்ளனர் ஆனால் நீண்ட நேரம் போராடியும் காப்பாற்ற முடியாததால் ஆந்திர மாநிலம் குப்பம் போலீசாருக்கு அங்குள்ளவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தடுப்பணையில் மூழ்கி மாயமான சண்முகத்தை தேடி வருகின்றனர்.
Next Story