ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை* திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள முட்புதரில் அழுகிய நிலையில், சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர், தகவலின் பேரில் சம்பவ இடத்தில் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார், மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் ஆய்வு மேற்க்கொண்டனர்.. அதனை தொடர்ந்து அழுகிய நிலையில், எலும்பு கூடு மட்டுமே இருந்த உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து, இறந்த நபர் யார்? ஆணா? பெண்ணா? எந்த பகுதியை சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டு, முட்புதரில் வீசப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Next Story

