கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

மோதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்த நகைகளை திருப்பி தர கோரி பொதுமக்கள் முற்றுகை
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பூமாண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மோதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது இதில் மோதூர், பூமாண்டஅள்ளி,பள்ளிப்பட்டி, உட்பட 20க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 2012 முதல் 2014 வரை நகை அடகு வைத்தவர்கள் 2014 இறுதியில்  30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் 135 பவுன் நகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சில மாதங்கள் காத்திருங்கள் என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து 2015 தொடக்கத்தில் நகை உரிமையாளர்கள் பணத்தை கட்டி நகையை கேட்ட போது கூட்டுறவு வங்கியில் நகை இல்லாதது தெரிய வந்தது. இது குறித்து புகார் தெரிவித்த நிலையில் நகை மதிப்பீட்டாளர் 55 வயதான பூதாளம் வங்கி செயலாளர் சகாதேவன் என இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் மேலும் அவர்கள் நகைகள் மற்றும் வேளாண் பயிர் கடன்ங்களில் முறைகேடுகள் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து வழக்கு பதிவு செய்து பட்டு விசாரணை நடந்து வருகிறது மேலும் சகாதேவன் இருந்து மற்றும் பூதாளம் ஆகியோரிடம் இருந்து பணம் மற்றும் நிலம் ஜாப்தி செய்யப்பட்ட நிலையில் நகை அடகு வைத்த 35 நபர்களுக்கு 135 சவரன் தங்க நகையை தற்போது வரை வழங்காமல் அதிகாரிகள் அழைக்கழிப்பு செய்து வருகின்றனர். கூட்டுறவு சங்க பதிவாளர்கள் விசாரணை மட்டும் நடத்தி வந்த நிலையில் அவர்களுக்கான நகை மற்றும் இழப்பீடு எதுவும் தராமல் எழுத அழைப்பு செய்து வந்ததால் கடந்த 15 ஆண்டுகளாக காத்திருந்தவர்கள் ஆத்திரமடைந்து இன்று காலை 10 மணிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகத்தை திறக்க கூடாது என போராடினர் அலுவலர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இது குறித்த தகவல் அறிந்து வந்த கூட்டுறவு சங்க இணை பதிவாளர் விஷ்ணு பிரியா பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மேலும் நகை அடகு வைத்த ஆவணங்கள் வைத்துள்ளவர்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் தெரிவிக்கலாம் என கூறினார் முடிவில் அவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார் என அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.
Next Story