விவசாயி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை:

விவசாயி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை:
X
கயத்தார் அருகே விவசாயி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கயத்தார் அருகே விவசாயி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே உள்ள வடக்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரியப்பன்(54). விவசாயியான இவர் நிலப் பிரச்னை காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டி மகன் காளிப்பாண்டி என்ற காளி (31) என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாராம். இது தொடர்பாக கயத்தார் போலீசார் வழக்குப் பதிந்து, காளிப்பாண்டி என்ற காளியை கைது செய்தனர். இந்த வழக்கு, தூத்துக்குடி 2ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீதா, குற்றம் சாட்டப்பட்ட காளிப்பாண்டி என்ற காளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜரானார்.
Next Story