வழிகாட்டி பெயர் பலகை மறைப்பு வெளியூர் வாகன ஓட்டிகள் அவதி

வழிகாட்டி பெயர் பலகை மறைப்பு வெளியூர் வாகன ஓட்டிகள் அவதி
X
வழிகாட்டி பலகையை மறைக்கும் விளம்பர பலகையை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது
காஞ்சிபுரம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்லும், வெளியூர் வாகன ஓட்டிகளின் வசதிக்காக, நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் நெடுஞ்சாலைதஅதுறை சார்பில், வழிகாட்டி பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூங்கில் மண்டபம் சிக்னல் அருகில், வந்தவாசி, உத்திரமேரூர், செங்கல்பட்டு, கல்பாக்கம் உள்ளிட்ட ஊர்கள் எத்தனை கி.மீ., துாரத்தில் உள்ளது; இந்த ஊர்களுக்கு செல்ல எந்த திசையில் திரும்பி செல்ல வேண்டும் என்ற விபரத்துடன் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பெயர் பலகையை மறைத்து, தனியார் பட்டு ஜவுளி கடையில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், தாங்கள் செல்ல வேண்டிய ஊரின் திசையில் திரும்பாமல், திசைமாறி மாற்று ஊரை நோக்கி செல்கின்றனர். வழிகாட்டி பெயர் பலகை இருந்தும் வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு பயன் இல்லாமல் உள்ளது. எனவே, வழிகாட்டி பலகையை மறைக்கும் தனியார் பட்டு ஜவுளி கடையின் விளம்பர பலகையை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story