கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நிறுத்திய டூவீலரில் களவாடிய இளைஞர் கைது.
கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நிறுத்திய டூவீலரில் களவாடிய இளைஞர் கைது. கரூர் நீலிமேடு தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் வயது 27. இவர் ஏப்ரல் 10-ம் தேதி காலை 7 மணி அளவில் சிகிச்சையில் இருந்த அவரது உறவினரை சந்திக்க கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனது டூவீலரில் சென்றுள்ளார். டூவீலரை மருத்துவமனை வளாகம் முன்பு நிறுத்திவிட்டு, தனது உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் 10- மணியளவில் தனது டூவீலரை எடுக்க வந்துள்ளார். அப்போது தான் நிறுத்திய இடத்தில் டூ வீலரை காணாதது கண்டு திடுக்கிட்டார். மேலும், இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடமும், அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடமும் தனது டூவீலர் குறித்து விசாரித்த போது, எந்த தகவலும் கிடைக்காததால், இது குறித்து காவல் நிலையத்தில் ஹரிகரன் தனது டூவீலரை காணவில்லை என புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, கரூர், வேலுச்சாமிபுரம், கோதூர் பிரிவு 3-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் ஜீவா வயது 29 என்பவர் அந்த டூவீலரை களவாடியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக ஜீவாவை கைது செய்து, களவாடிய டூவீலரை பறிமுதல் செய்தனர். மேலும்,ஜீவாமீது வழக்கு பதிவு செய்து ஏப்ரல் 30ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story




