கோவை: தொடரும் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற போராட்டம் !

வசைத்தறியாளர்கள் விடிய விடிய போராட்ட பந்தலிலேயே குடும்பத்தோடு அமர்ந்து கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 29 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து கூலி உயர்வைப் பெற்றுத் தர வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டம், கடந்த ஐந்து நாட்களாக குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டமாக நீடித்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி பகுதிகள் முழு அடைப்பில் இருந்தன. மறுசுழற்சி பஞ்சாலைகளும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றியுள்ளனர்.விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று விடிய விடிய உண்ணாவிரதப் பந்தலிலேயே காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு விரைந்து தலையிட்டு கூலி உயர்வைப் பெற்றுத் தரும் வரை போராட்டம் தொடரும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story