க. பரமத்தி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.

க. பரமத்தி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.
க. பரமத்தி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, க. பரமத்தி, பெரியார் நகரை சேர்ந்தவர் மணி மனைவி நாச்சம்மாள் வயது 50.இவரது உறவினர் பழனி மகன் முருகன் வயது 45. இவர்கள் இருவரும் ஏப்ரல் 15 ஆம் தேதி மாலை 6:45 மணி அளவில், கரூர் - கோவை சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். நாச்சம்மாள் பின்னால் அமர்ந்து சென்றார். இவர்களது வாகனம் க.பரமத்தி, கருப்பையா காம்ப்ளக்ஸ் அருகே வந்தபோது, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பழங்காநத்தூர் பகுதியைச் சேர்ந்த நல்ல பெருமாள் மகன் அருண்குமார் வயது 21 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், முருகன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் முருகன் மற்றும் நாச்சம்மாள் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு கரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக நாச்சம்மாள் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க. பரமத்தி காவல்துறையினர்.
Next Story