குற்றாலத்தில் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளிக்கும் மக்கள்

குற்றாலத்தில் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளிக்கும் மக்கள்
X
மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளிக்கும் மக்கள்
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள ஸபுகழ் பெற்ற சுற்றுலா தளமான குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் நீர்வரத்து வெகுவாக குறைந்த காணப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்காக இன்று வந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கின்ற ஒரு பகுதியில் மட்டும் சிறிதளவே நீர் விழுந்து வரும் நிலையில், இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து அருவி நீரில் குளித்து வருகின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story