பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்
X
சிவகங்கையில் பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்‌
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சிவகங்கையில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப் பள்ளி, 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில், 6 வயது முதல் 14 வயது வரை உள்ள பார்வையற்ற, குறைபார்வையுடைய மாணவ மாணவிகள் சேர்ந்து படிக்கலாம். விடுதி சார்ந்த இப்பள்ளியில் உணவு, உடை இலவசமாக வழங்கப்படும். மேலும், கல்வி உதவித்தொகையும், நான்கு இணை சீரூடைகளும் வழங்கப்படும். மேலும், இப்பள்ளியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் பிரெய்லி முறையில் கல்வியுடன் உடற்கல்வி மற்றும் கணினி பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. விடுதியில் பார்வையற்ற, குறைபார்வையுடைய மாணவர்களை கனிவுடன் கவனிக்க விடுதி பணியாளர்கள் உள்ளனர். கூடுதல் விபரங்களுக்கு தலைமையாசிரியர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, இளையான்குடி சாலை, அம்பேதகர் சிலை அருகில் , சிவகங்கை-630561 என்ற முகவரியிலோ, 7010498011, 9894945457 என்ற அலைபேசி எண்களிலோ அல்லது 04575-240458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். எனவே, தகுதியுடைய மாணாக்கர்கள் இப்பள்ளியில் சேர விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
Next Story