விளையாட்டு மைதானம் பணிகளை மேயர் ஆய்வு!

X
தூத்துக்குடி வஉசி கல்லூரி அருகில் கைப்பந்து மற்றும் இறகுப்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வஉசி கல்லூரி அருகில் கைப்பந்து மற்றும் இறகுப்பந்து விளையாடுவதற்காக செயற்கையான தரையுடன் பிரத்தியேகமாக நடைபெற்று வரும் (Turf) விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story

