கனிம வள லாறிகள் சிறைபிடிப்பு

கனிம வள லாறிகள் சிறைபிடிப்பு
X
நாம் தமிழர் கட்சி
குமரி மாவட்டம் வழுக்கம்பாறை பகுதியில் முறைகேடாக செயல்பட்டு வரும் கனிமவள குவாரியின் செயல்பாட்டை பலமுறை சட்டபூர்வமாக மாவட்ட நிர்வாகத்திற்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் நாம் தமிழர் கட்சியினர் சார்பில்  புகார் மனு அளிக்கப்பட்டது. அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்த குவாரியில் இருந்து அதிக பாரத்துடன் கனரக வாகனங்களில் போதிய அனுமதி சீட்டு இல்லாமல் கடத்திச் செல்லப்பட்டு வருகின்ற வாகனங்களை வழுக்கம்பாறை பகுதியில் சகாய மாதா கோவில் அருகில் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் தீபக் சாலமோன், தொகுதி தலைவர் சேதுபதி மற்றும் பொது மக்கள் சேர்ந்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Next Story