ஆட்சியர் தலைமையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி பேருந்து நிலையத்தில் நெகிழி இல்லா தருமபுரி மற்றும் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் விழிப்புணர்வு கலெக்டர் சதீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
உலகம் உருவான காலம் முதல் தற்போது வரை மண்ணில் உருவாகிய அனைத்தும் மண்ணிலேயே அழிந்து போக வேண்டும். அதுவே உலக நியதி. அதற்கு மாறாக ஒரு பொருள் உருவாகுமேயானால் அது இந்தப் பூமியின் அழிவிற்கு முதன்மை காரணமாகவும் அமையும். அத்தகைய பொருளே நெகிழி ஆகும். உலக மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொருட்களின் பயன்பாடும், தேவையும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. தற்போது நெகிழியின் பயன்பாடு அதிகரித்து செல்வது மட்டுமில்லாமல் மனித வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது.நெகிழி இல்லா தமிழகம் உருவாக்க வேண்டும் என தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகின்றது. அதனடிப்படையில் தருமபுரி பேருந்து நிலையத்தில் நெகிழி இல்லா தருமபுரி மற்றும் மீண்டும் மஞ்சப்பபை இயக்கத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று தொடங்கி வைத்தார். ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து பதாதைகள் கையில் ஏந்தி பேருந்து நிலையத்தில் தொடங்கி நான்கு ரோடு சந்திப்பு, நெசவாளர் காலனி, நேதாஜி பை பாஸ் சாலை வழியாக சென்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை வரை சென்று முடியுற்றது. இந்நிகழ்ச்சியின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மாசு கட்டுபாட்டு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிகள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கோஷங்கள் எழுப்பிவாறு ஊர்வலமாக சென்றனர்.
Next Story