போக்சோ வழக்கில் முதியவருக்கு சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு சிறை தண்டனை
X
போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை - நீதிபதி உத்தரவு
சிங்கம்புணரியை சேர்ந்தவர் 63 வயதான முருகேசன். இவர் பாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் நிலையில் அவரை கைது செய்த சிங்கம்புணரி காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கானது சிவகங்கை ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் உள்ள் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் முருகேசன் மீதான குற்றம் உறுதி செய்யப்படவே அவருக்கு நீதிபதி கோகுல் முருகன் 20 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்ததுடன் அரசு தரப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டார். போக்சோ வழக்கில் பாய் வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story