மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலைக்கு எதிர்ப்பு

மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலைக்கு எதிர்ப்பு
X
மானாமதுரையில் மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சிப்காட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொதுஉயிரி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன்காரணமாக, செய்களத்தூர் மற்றும் சூரக்குளம் பில்லறுத்தான் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் நடைபெற்ற சமீபத்திய கிராம சபைக் கூட்டங்களில், ஆலையை அமைக்கக் கூடாது என்ற தீர்மானங்கள் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. முன்னதாக 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டபோதும், மானாமதுரை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மக்களின் தட்டியெழுப்பும் பேச்சுகளுக்கிடையில், ஆலையை ஆதரிக்க வெளியூரிலிருந்து ஆட்கள் அழைத்து வரப்பட்டதாகவும், பின்னர் போலீஸார் அவர்களை வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மக்கள் எதிர்ப்பையும் புறக்கணித்து, ஆலையின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பணியை நிறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மானாமதுரை முன்னாள் எம்எல்ஏக்கள் நாகராஜன் மற்றும் குணசேகரன், மானாமதுரை ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் உட்பட அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்
Next Story