சிவகங்கையில் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு

சிவகங்கையில் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு
X
சிவகங்கையில் அடிப்படை வசதிகள் இல்லை - எம்பியிடம் முறையிட்ட மக்கள்
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம், சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கக்கன் காலனி மக்களைச் சந்தித்தார். அப்போது, அப்பகுதி மக்கள் தங்களின் நீண்ட காலப் பிரச்சினைகளை எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் எங்கள் தாத்தா காலத்திலிருந்து காங்கிரசுக்கு மட்டுமே வாக்களித்து வருகிறோம். ஆனால், இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. சாலை மற்றும் குடிநீர் வசதிகள் கூட மேம்படுத்தப்படவில்லை" என்று அவர்கள் கலக்கத்துடன் கூறினர். மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இது இந்தியா முழுவதும் உள்ள பிரச்சினை என்றும், விரைவில் ஊதியம் வழங்கப்படும் என்றும் கார்த்திக் சிதம்பரம் உறுதியளித்தார். மக்களின் குறைகளைக் கேட்டறிந்த கார்த்திக் சிதம்பரம், தனது நிதியிலிருந்து தேவையான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Next Story