சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

X
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நேசனல் ஹெரால்ட் வழக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பொய் குற்றச்சாட்டை எழுப்பும் மத்திய அரசை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டு மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் நேசனல் ஹெரால்டு கேஸ் உட்பட அமலாக்கத்துறை தொடர்ந்த அத்தனை வழக்குகளும் ஒரு காலத்தில் நமந்த பட்டாசாக ஆகும். பா.ஜ.க தலைவர் பலமேடை சென்று வந்தவர், தற்சமயம் வந்துள்ள இந்த மேடைக்காக இந்த போராட்டத்தை அறிவித்திருக்கிறார். நேசனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக போராட்டம் அறிவித்திருப்பது என்பது பா.ஜ.க தலைவரின் அறியாமையைதான் காட்டுகிறது. பா.ஜ.க, அதிமுக கூட்டணி என்பது ஒரு கட்டாய கல்யாணம் என்றும், அது துப்பாக்கி முனை கல்யானம் என கூறலாம் என்றும், வடக்கில் மணமகன் தேர்வெழுதி வேலை கிடைத்தால் அவரை கடத்தி சென்று மணமகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பார்கள் அதுபோலத்தான் பா.ஜ.க அதிமுகவை மிரட்டி கல்யாணம் செய்துள்ளது. இந்த கல்யானம் நீண்ட நாளைக்கு செல்லாது. உண்மையான அதிமுக தொண்டர் இதனை ஏற்கவில்லை எனவும், விருப்பமில்லாத கூட்டணியாகத்தான் உண்மையான தொண்டர்கள் பார்ப்பதுடன் தமிழக மக்களும் பார்க்கின்றனர் என்று தெரிவித்தார். மேலும் அமைச்சர் பொன்முடி பேசியதைதான் வன்மையாக கண்டிப்பதாகவும் மூத்த அமைச்சர், அதிலும் பேராசிரியர் இதுபோல் பேசியிருக்க கூடாது என்றும், முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்கிறார் ஆனால் அது போதாது என்றும் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும், ஒரு பொருப்புள்ள பதவியில் இருப்பவர் இதுபோல் பேசியது தவறு கடுமையான நடவடிக்கையை முதல்வர் எடுத்திருக்க வேண்டும். கூட்டணி இல்லாமல் நாம் தமிழர் கட்சி மட்டும் இருக்கப்போவதில்லை என்றும், மற்றோரு கட்சியும் தனித்தே (விஜயின் த.வெ.க)போட்டியிடும் என்றும், மேலும் ஒருவர் பதவி பறிக்கப்பட்டு இமயமலை சென்று திரும்பிய நிலையில் அவரும் ஒரு தனி கட்சி ஆரம்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டனணி தமிழகத்தில் வழுவாக இருப்பதாகவும், இங்கிருந்து யாரும் விலகி செல்ல வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
Next Story

